தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கிரேண் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கிரேண் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
Updated on
1 min read

பேங்காக்: தாய்லாந்தில் ஓடும் ஒயில் மீது கிரேண் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் வடகிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. உபோன் ராட்சதானி மாகாணத்துக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் மீது கிரேண் விழுந்துள்ளது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் தெரிவித்த போலீஸார், விபத்து நடந்த இடத்தில், அதிவேக ரயில் திட்டப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேண் சரிந்து ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது.

இதனால், ரயில் தடம் புறண்டு தீப்பற்றியது. தற்போது தீ அணைக்கப்பட்டுவிட்டது. எனினும், இடிபாடுகளில் மீட்கப்படாத உடல்கள் இருக்கின்றன. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கிரேண் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு; கிராம் ரூ.300-ஐ கடந்து மிரட்டும் வெள்ளி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in