அமெரிக்க போர் விமானங்களை தடுக்க முடியவில்லை - வெனிசுலாவில் சீன ரேடார், ஆயுதங்களுக்கு தோல்வி

அமெரிக்க போர் விமானங்களை தடுக்க முடியவில்லை - வெனிசுலாவில் சீன ரேடார், ஆயுதங்களுக்கு தோல்வி
Updated on
1 min read

கராகஸ்: வெனிசுலா​வின் வான் பரப்பை கண்​காணிக்க சீன ரேடார்கள் நிறு​வப்​பட்டு உள்​ளன. ஆனால் அந்த நாட்​டில் அமெரிக்க போர் விமானங்​கள் நுழைந்​த​போது சீன ரேடார்​களால் கண்​டு​பிடிக்க முடிய​வில்லை என்று பாது​காப்​புத் துறை நிபுணர்​கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 7 முதல் 10-ம் தேதி வரை இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் நடை​பெற்​றது. பாகிஸ்​தானின் வான் பரப்பை கண்​காணிக்க சீனா​வின் அதிநவீன ரேடார்​கள் நிறு​வப்​பட்டு இருந்​தன. ஆனால் ஆபரேஷன் சிந்​தூரின் ​போது சீன ரேடார்​களை தாண்டி இந்திய போர் விமானங்​கள் வெற்​றிகர​மாக ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தின. இதன்​ காரண​மாக சீனா​வின் ஆயுத ஏற்​றுமதி கணிச​மாக குறைந்து வரு​கிறது.

வெனிசுலா​விலும் தோல்வி: கடந்த 25 ஆண்​டு​களுக்​கும் மேலாக வெனிசுலா​வுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக் கொண்ட சீனா, வெனிசுலா​வில் கால் பதித்​தது.

வெனிசுலா​விடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்த சீனா, அதற்கு ஈடாக அந்த நாட்​டுக்கு ஏராள​மான ஆயுதங்​களை ஏற்​றுமதி செய்​தது. குறிப்​பாக வெனிசுலா நாட்​டின் வான் பாது​காப்​புக்​காக சீனா​வின் அதிநவீன ஜேஒய்​-27 ரக ரேடார்கள் நிறு​வப்​பட்​டன. அதோடு எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்க சீனா​வின் எச்​கியூ-9 ரக ஏவு​கணை​கள் வெனிசுலா​வின் எல்​லைப் பகு​தி​களில் நிறுவப்பட்டு இருந்​தன.

சீனா​வின் 20 கே-8 கரகோரம் போர் விமானங்​கள், ஒய்​-பிஎப்​ 100 ரக சரக்​கு- போர் விமானங்​கள், எல்​-15 பால்​கன் பயிற்சி போர் விமானங்​கள், 100 விஎன் 4 ரக கவச வாக​னங்​கள் உள்​ளிட்​டவை வெனிசுலா​வின் ராணுவம், விமானப் படை​யில் இடம்​பெற்று உள்ளன.

ஆனால் கடந்த 3-ம் தேதி அமெரிக்​கா​வின் 150 போர் விமானங்கள், ஹெலி​காப்​டர்​கள் வெனிசுலா எல்​லைப் பகுதிக்குள் அத்​து​மீறி நுழைந்​தன. இந்த போர் விமானங்​களை சீன ரேடார்​களால் முன்​கூட்​டியே கண்​டறிய முடிய​வில்​லை. மேலும் சீனா​வின் வான் தடுப்பு ஏவு​கணை​களாலும் அமெரிக்க போர் விமானங்​களை சுட்டு வீழ்த்த முடிய​வில்​லை. அமெரிக்க போர் விமானங்​களுக்கு சிறு பாதிப்​பு​கூட ஏற்​ப​டா​மல் பத்​திர​மாக நாடு திரும்பி உள்​ளன.

இது குறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறும்​போது, “இந்திய ராணுவத்​தின் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​ போது சீன ஆயுதங்​கள் பெரும் தோல்​வியை சந்​தித்​தன. தற்​போது வெனிசுலா நாட்​டிலும் அமெரிக்க ராணுவத்​திடம் சீன ஆயுதங்​கள் மீண்​டும் தோல்​வியை சந்​தித்து உள்​ளன. இது சர்​வ​தேச அளவில்​ சீனா​வுக்​கு பெரும்​ பின்​னடைவை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது” என்​று தெரிவித்தனர்​.

அமெரிக்க போர் விமானங்களை தடுக்க முடியவில்லை - வெனிசுலாவில் சீன ரேடார், ஆயுதங்களுக்கு தோல்வி
திருப்பரங்குன்றம் வழக்கில் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in