திபெத் - நேபாள எல்லையில் வெள்ளம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அவசர ஆலோசனை

திபெத் - நேபாள எல்லையில் வெள்ளம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அவசர ஆலோசனை
Updated on
1 min read

பெய்ஜிங்: திபெத் - நேபாள எல்​லைப் பகுதி​யில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் நூற்​றுக்​கணக்​கானோர் உயி​ரிழந்​தும், ஏராளமானோர் மாய​மாகி​யும் உள்ள நிலை​யில், நிலை​மையை ஆய்வு செய்​வதற்​காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலை​மை​யில் ஆளும் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதுகுறித்து சீன அரசு செய்தி நிறு​வன​மான ஜின்​ஹூவா தெரிவித்​துள்​ள​தாவது: திபெத் தன்​னாட்​சிப் பிராந்​தி​யத்​தில் உள்ள ஜிராங் மாவட்​டத்​தில் கடந்த புதன்​கிழமை ஏற்​பட்ட இயற்கை பேரிடர் காரண​மாக நேபாளத்​தில் கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. இந்த வெள்​ளப்​பெருக்​கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் அதிபர் ஜி ஜின்​பிங் உள்ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்​தினர்.

கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு​களின்​படி, காணா​மல் போன சீனர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினரைத் தேடிக் கண்​டு​பிடிக்​கும் பணி​களை அறி​வியல் பூர்​வ​மான திட்​ட​மிடலுடன் முடுக்​கி​விட முடிவு செய்​யப்​பட்​டது. இவ்​வாறு ஜின்​ஹுவா தெரி​வித்​துள்​ளது. நேபாளத்​தில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 500-ஐ தாண்​டி​யுள்​ளது.

திபெத்​தில் 3 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் திபெத்​தில் 550-க்​கும் மேற்​பட்​டோரும், நேபாளத்​தில் 100 சீனர்​களும் மாயமாகியுள்ளனர். பாதிக்​கப்​பட்ட பகு​தி​களி​லிருந்து 555 சுற்றுலாப் பயணி​கள் உட்பட சுமார் 1,000 பேர் பாது​காப்​பான இடங்​களுக்கு வெளி​யேற்​றப்​பட்​டுள்​ள​தாக சீன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். எனினும், மீட்​கப்​பட்ட சுற்​றுலாப் பயணி​களின் சொந்த நாட்​டின் விவரங்​கள் முழு​மை​யாக வெளியிடப்படவில்லை.

திபெத் - நேபாள எல்லையில் வெள்ளம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அவசர ஆலோசனை
நேபாள பேரழிவில் சிக்கிய 37 பேரை மீட்க கோரி வழக்கு: நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in