நேபாள பேரழிவில் சிக்கிய 37 பேரை மீட்க கோரி வழக்கு: நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

நேபாள பேரழிவில் சிக்கிய 37 பேரை மீட்க கோரி வழக்கு: நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
Updated on
1 min read

மதுரை: நே​பாளத்​தில் சிக்​கிய உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி உள்பட 37 பேரை மீட்​கக் கோரிய வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளி​வைத்​துள்​ளது.

திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த வழக்​கறிஞர் பர்​வேஷ் முஷ்ரப், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: கும்​பகோணத்​தைச் சேர்ந்த டிராவல்ஸ் மூலம், தமிழகம், புதுச்​சேரியைச் சேர்ந்த 57 பேர், கடந்த ஆக.23-ல் நேபாளம் சென்​றனர். அவர்​கள் நேபாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்​கினர். இந்​தக் குழு​வில் உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி ஒரு​வரும் உள்​ளார்.

எனவே, நேபாளம் சென்ற தமிழகத்​தைச் சேர்ந்த 57 பேரில் மீட்​கப்​பட்​ட​வர்​கள், சிகிச்சை பெற்று வருபவர்​கள், காணா​மல் போனவர்​கள் குறித்த விவரங்​களை, அவர்​களின் குடும்​பத்​தினருக்கு தெரிவிக்க உத்​தர​விட வேண்​டும். அவர்​களை மீட்க வெளி​யுறவுத்​துறை, இந்​திய தூதரகம், தமிழக அரசு இணைந்து நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இம்​மனுவை நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்வு, மீட்பு பணி​கள் தொடர்​பாக தமிழக அமைச்​சர்​கள் குழு டெல்லி சென்​றிருப்​ப​தாக தகவல்​கள் வந்​துள்​ளதே எனக் கேள்வி எழுப்பி வி​சா​ரணையை செப்​.10-க்​கு தள்​ளி வைத்​தது.

நேபாள பேரழிவில் சிக்கிய 37 பேரை மீட்க கோரி வழக்கு: நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in