சீன, ரஷ்ய அதிபர்கள் வீடியோ அழைப்பில் பேச்சு

சீன, ரஷ்ய அதிபர்கள் வீடியோ அழைப்பில் பேச்சு
Updated on
1 min read

பெய்ஜிங்: ரஷ்​யா​வுக்கு ஆதர​வளிப்​பதை சீனா நிறுத்த வேண்​டும் என ஐரோப்​பிய நாடு​களின் தலை​வர்​கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீனா, ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகம் செய்து வந்​தது.

இதனால் மேற்​கத்​திய நாடு​கள் ரஷ்​யா​வுக்கு பொருளா​தார தடைவிதித்​தும், எந்த பலனும் இல்லை. தற்​போது ஐரோப்​பிய நாடுகளின் தலை​வர்​கள் சீனா​வுடன் உறவை மேம்​படுத்தி வருகின்​றனர். இங்​கிலாந்து மற்​றும் கனடா பிரதமர்​கள் சீனாவுக்கு கடந்த மாதம் சென்​றனர். ஜெர்​மன் அதிபரும் இந்த மாதம் சீனா செல்​ல​வுள்​ளார்.

இந்​நிலை​யில் சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும், ரஷ்ய அதிபர் புதினும் நேற்று வீடியோ அழைப்​பில் பேசினர். ரஷ்​யா- உக்​ரைன் இடையேயான போர் தொடர்​பாக சீனா​வின் நிலைப்​பாட்​டில் எந்த மாற்​ற​மும் இல்லை என்​பதை உறுதி செய்​வதற்​காக இவர்​கள் பேசி​யிருக்​கலாம் என கூறப்​படு​கிறது.

ரஷ்ய பாது​காப்பு கவுன்​சில் செய​லா​ளர் செர்கே சோய்​கு, கடந்த வாரம் பெய்​ஜிங் சென்​று, சீன வெளி​யுறவுத்​துறை அதி​காரி வாங்க் யீயை சந்​தித்​தார். உலகள​வில் நிச்​சயமற்ற சூழல் நில​வும் நிலை​யில், இரு நாடு​களும் நெருங்​கிய உறவை பராமரிக்​க அவர்கள்​ ஒப்​புக்​ கொண்​டனர்​.

சீன, ரஷ்ய அதிபர்கள் வீடியோ அழைப்பில் பேச்சு
ஹெச்.ராஜாவிடம் பழனிசாமி நலம் விசாரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in