ஏவுகணை தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு அனுப்பிய சீனா

ஆதாரங்களை வெளியிட்டார் அமெரிக்க குடியரசுக் கட்சி நிர்வாகி நிக்கி ஹாலே
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா கடற்படை கப்பல்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா கடற்படை கப்பல்

Updated on
1 min read

வாஷிங்டன்: ஏவு​கணை​கள் தயாரிக்க உதவும் ரசாயனங்​களை ஈரானுக்கு சீனா அனுப்​பி​யுள்​ளது என்று அமெரிக்​கா​விலுள்ள குடியரசுக் கட்​சி​யின் நிர்​வாகி நிக்கி ஹாலே தெரி​வித்​துள்​ளார். மேலும் இதற்​கான ஆதா​ரங்​களை​யும் அவர் வெளி​யிட்​டுள்​ளார்.

அமெரிக்கா மற்​றும் ஈரான் நாடு​களுக்கு இடையே போர் காரணமாக ஹார்​முஸ் ஜலசந்தி யில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்​நிலை​யில் அமெரிக்கா​வுக்​கான ஐ.நா. தூத​ராக பணி​யாற்​றிய​வரும், தற்​போது அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்​சி​யின் நிர்​வாகி​யு​மான நிக்​கில ஹாலே எக்ஸ் சமூக வலை​தளத்​தில் சில ஆதா​ரங்​களை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: சிறை பிடிக்கப்பட்ட கப்பலில் இருந்து ஏவுகணைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ரசாயனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனா​விலிருந்து ஈரானுக்கு ரகசி​ய​மாக அனுப்பி வைக்​கப்​பட்​ட​வை. இதுதொடர்​பான சில புகைப்​படங்​கள் மற்​றும் ஆதா​ரங்​களை சமர்ப்​பித்​துள்​ளேன்.

ஈரான் தனது ரகசி​யத் திட்​டங்​களை மறைப்​ப​தற்​காக சீனாவைப் பயன்​படுத்​திக் கொள்​கிறதா என்ற கேள்வி எழுகிறது. கப்​பலில் இருந்த ரசாயனப் பொருட்​கள் சீன நிறு​வனங்​களிட​மிருந்து பெறப்​பட்​டதற்​கான முத்​திரைகள் இருக்​கின்​றன. இதன் மூலம் உலக நாடு​களை ஈரான் ஏமாற்றி வரு​கிறது.

ஈரானின் இந்த நடவடிக்கை அணுசக்தி ஒப்​பந்​தத்தை மீறு​வது மட்​டுமல்​லாமல், உலக அமை​திக்கே ஒரு மிகப்​பெரிய சவாலாக உள்​ளது. அமெரிக்​கா​வின் நட்பு நாடு​களை அச்​சுறுத்​தும் வகை​யில் ஈரான் தனது ஏவு​கணைத் திட்​டத்தை வலுப்​படுத்தி வரு​வதை அமெரிக்கா ஒரு​போதும் அனு​ம​திக்​காது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அமெரிக்​கா​வின் இந்த அதிரடி சோதனை மற்​றும் கப்​பல் சிறைபிடிப்பு நடவடிக்​கைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரும் நிலை​யில், நிக்கி ஹாலே​யின் இந்த அறி​விப்பு ஈரான் நாட்​டுக்கு மேலும் நெருக்​கடியை கொடுத்​துள்​ளது.

அதே​நேரத்​தில், அமெரிக்​கா​வின் இந்​தக் குற்​றச்​சாட்​டு​களை ஈரான் முற்​றி​லும் மறுத்​துள்​ளது. அமெரிக்கா திட்​ட​மிட்டு ஒரு நாடகத்தை அரங்​கேற்றி வரு​வ​தாக​வும்​, அந்​தக்​ கப்​பலில்​ ​சா​தா​ரண​மான வணி​கப்​ பொருட்​கள்​ மட்​டுமே இருந்​த​தாக​வும்​ ஈ​ரான்​ தரப்​பில்​ விளக்​கம்​ தரப்​பட்​டுள்​ளது. நிக்கி ஹாலேவின் கூற்றுக்கு சீன நாடும் மறுப்பு தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா கடற்படை கப்பல்</p></div>
அபிஷேக் சர்மா சதம் விளாசல்: டெல்லியை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in