அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டது: அதிபர் மசூத் பெசெஷ்கியான் கருத்து

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்

Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்கா​வுட​னான போரில் ஈரானின் வெற்​றியை உலகமே ஒப்​புக்​கொண்டு விட்​ட​தாக அந்​நாட்​டின் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான் தெரி​வித்​து உள்​ளார்.

கடந்த ஜூன் 17-ம் தேதி ஈரான்​-அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இந்த 60 நாள் போர் நிறுத்​தம் கடந்த இரு தினங்​களுக்கு முன்பு முடிவுக்கு வந்​தது.

ஈரான் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்​தப்​போவ​தாகவும், கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு கப்​பல்​களுக்கு முக்​கிய வழித்​தட​மாக உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தியை கைப்​பற்​றப் போவ​தாக​வும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வரு​கிறார். அமெரிக்கா மீண்​டும் தாக்​குதலை தொடங்​கி​னால் பதிலடி கொடுக்க தயா​ராக இருப்​ப​தாக ஈரானும் எச்​சரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான் அளித்த பேட்​டி​யில்​,“அமெரிக்கா​வுட​னான போர் முடிவுக்கு வர வேண்​டும். ஏனெனில் இந்​தப் போரில் எங்​கள் வெற்​றியை உலக நாடுகளே அங்​கீகரித்​துள்​ளது. அமெரிக்கா மீது உலகள​வில் வெறுப்பு நில​வு​கிறது” என்​றார்.

ஈரான் மீது இது​வரை இல்​லாத அளவுக்கு பொருளா​தார தடைகளை விதிக்​கப்​போவ​தாக ட்ரம்ப் மிரட்​டல் விடுத்​துள்ள நிலை​யில் ஈரான் அதிபர் இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

பொருளா​தார தடைகள் குறித்து பேசிய ட்ரம்ப், “ஈரானுக்கு எதி​ராக இது​வரை இல்​லாத அளவி​லான பொருளா​தா​ரத் தடைகள் மற்​றும் தனிமைப்​படுத்​தும் நடவடிக்​கைகள் அமல்​படுத்​தப்​படும். ஈரானின் அணு ஆயுதத் திட்​டத்தை கைவிடச் செய்​வதோடு, எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு கப்​பல்​களுக்கு முக்​கிய வழித்​தட​மாக உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தியை முழு​மை​யாக மீண்​டும் திறக்​கும்​படி ஈரானை வற்​புறுத்​து​வ​தே இதன்​ நோக்​க​மாகும்” என்​றார்​.

<div class="paragraphs"><p>ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்</p></div>
மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 64 ரன்களுக்கு சுருண்டது வங்கதேச அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in