தலைநகரத்தையே சீரழிக்கிறீர்கள் என்று கூறி துப்பாக்கியுடன் போதை கும்பலை விரட்டிய வங்கதேச அமைச்சர்

இஷ்​ராக் உசேன்

இஷ்​ராக் உசேன்

Updated on: 
1 min read

டாக்கா: வங்​கதேசத் தலைநகர் டாக்​கா​வில் உள்ள சேரிப் பகுதி​யில் கையில் துப்​பாக்​கி​யுடன் சென்று போதைப்​பொருள் விற்​பனை மையத்​தில் அந்​நாட்டு ராணுவ அமைச்​சர் இஷ்​ராக் உசேன் சோதனை நடத்தியது சமூகவலை​தளங்​களில் விவாதத்​தைக் கிளப்​பியுள்​ளது.

வங்​கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வங்​கதேச தேசி​ய​வாதக் கட்சி(பிஎன்பி) நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ராணுவ அமைச்சராக இருப்பவர் இஷ்​ராக் உசேன் (39). இவர் ஒரு வீடியோ பதிவை வெளி​யிட்​டார்.

அதில், கெண்​டாரியா ரயில் நிலை​யத்​தின் அருகே வாக​னத்​தி​லிருந்து இறங்​கும் அவர், ஒரு கையில் ஒலிபெருக்​கி​யும் மறுகையில் துப்​பாக்​கி​யும் ஏந்​தி​யபடி சிலரை விரட்​டிச் செல்​வது போன்ற காட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன.

அப்​போது அங்​கிருந்த கும்​பலை நோக்கி, “முழு நகரத்​தையும் சீரழிக்​கிறீர்​கள்; ஒட்​டுமொத்​தப் பகுதி​யையும் நாச​மாக்​கு​கிறீர்​கள்” என்று அந்த அமைச்​சர் கண்​டி்ப்பது பதிவாகி​யுள்​ளது.

இது​குறித்து டாக்கா பெருநகர காவல் துறை​யின் கூடுதல் துணை ஆணை​யர் மசூத் ரானா கூறும்​போது, “இந்த சோதனை குறித்து அமைச்​சர் எங்​களுக்கு முன்​கூட்​டியே தெரி​விக்​க​வில்லை. சம்​பவம் முடிந்தபிறகே எங்​களுக்​குத் தெரிய​வந்​தது” என்​றார்.

கெண்​டாரியா காவல் நிலைய அதி​காரி மொனிருஜாமான் மொனி கூறும்​போது, “பிடிபட்ட 6 பேரை​யும் காவல் நிலை​யத்​துக்கு அழைத்து வந்​தோம். அவர்​களிடம் இருந்து ஒரு​விதப் பொடி கைப்​பற்​றப்​பட்​டுள்​ளது. அது போதைப்​பொருளா என்​பதை உறுதிப்​படுத்​த் சோதனைக்கு அனுப்​பப்​படும்” என்​றார்.

அதிரடி தொடரும்

இந்​தச் சோதனை​யின் வீடியோவைப் பகிர்ந்​துள்ள அமைச்​சர் இஷ்​ராக் உசேன், “இஷ்​ராக்​கின் அதிரடி நட​வடிக்கை: போதைப்பொருள் மையங்​கள் தகர்ப்பு - வியாபாரி​கள் போலீஸாரிடம் ஒப்​படைப்பு” எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

மேலும், தனது தொகுதிக்​குட்​பட்ட நகரப் பகுதி​களில் போதைப்​பொருளுக்கு எதிரான நட​வடிக்​கைகளைத் தொடர்ந்து மேற்​கொண்டு, என் தொகுதியை போதைப்​பொருள் அற்ற பகுதி​யாக மாற்​று​வேன்” என்று உறுதி​யளித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>இஷ்​ராக் உசேன்</p></div>
“வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” - ராகுல் காந்தி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in