“கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை” - ஈரான் அதிபர் சபதம்

“கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை” - ஈரான் அதிபர் சபதம்
Updated on
1 min read

தெஹ்ரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது இஸ்லாமிய குடியரசின் உரிமை மற்றும் கடமை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் மசூத் பெசெஷ்கியன் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வரலாற்று குற்றத்தின் குற்றவாளிகள் மற்றும் மூளையாக செயல்பட்டவர்களைப் பழிவாங்குவதை தனது சட்டபூர்வமான கடமை மற்றும் உரிமை என்று ஈரான் இஸ்லாமிய குடியரசு கருதுகிறது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், உலகளவில் ஷியா மதத்தின் முக்கிய தலைவருமான ஒருவரின் படுகொலை என்பது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான, வெளிப்படையான போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை” - ஈரான் அதிபர் சபதம்
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in