பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கன்: பைலட்டை உயிருடன் பிடித்த தலிபான்கள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: ஆப்​கானிஸ்​தானின் ஜலாலா​பாத் பகு​தி​யில் பாகிஸ்​தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்​தி, பைலட்டை உயிருடன் பிடித்​துள்​ள​தாக தலி​பான்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பாகிஸ்​தான் - ஆப்​கானிஸ்​தான் எல்​லை​யில் தொடர் மோதல் நடை​பெற்று வந்​த​தால், ஆப்​கானிஸ்​தான் மீது நேரடி போர் தொடுப்​ப​தாக பாகிஸ்​தான் நேற்று முன்​தினம் அறி​வித்​தது. இதையடுத்து ஆப்​கானிஸ்​தானின் காபூல், காந்​த​கார், பக் ஷியா உட்பட பல இடங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் 2 நாட்​களுக்கு முன் வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது.

இதில் 270 தலி​பான்​கள் கொல்​லப்​பட்​டனர் என்​றும், 400-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர் என்​றும் பாகிஸ்​தான் கூறியது. ஆப்​கானிஸ்​தான் படைகள் நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் வீரர்​கள் 55 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான்கள் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் ஆப்​கானிஸ்​தானின் ஜலாலா​பாத் பகு​தி​யில், பாகிஸ்​தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்​தி​ய​தாக​வும், அதன் பைலட்டை உயிருடன் பிடித்​துள்​ள​தாக​வும் ஆப்​கானிஸ்​தான் போலீஸ் செய்தி தொடர்​பாளர் தயீப் ஹமாத் கூறி​யுள்​ளார். இதை ஆப்​கானிஸ்​தான் ராணுவ செய்தி தொடர்​பாளர் வஹிதுல்லா முகம​தி​யும் உறுதி செய்​துள்​ளார். ஆனால், ஆப்​கானிஸ்​தான் கூறு​வது பொய்​ என பாகிஸ்​தான்​ மறுத்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
சத்தீஸ்கர் சட்டப்பேரவையை பார்வையிட்ட 120 முன்னாள் மாவோயிஸ்ட்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in