டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா

டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா
Updated on
1 min read

சிட்னி: பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலி பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

டிக்டாக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா, ByteDanceLtd என்ற நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சத்தின் பேரிலேயே இந்தத் தடையை ஆஸ்திரேலியா விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்தத் தடை சீனாவுக்கும் - ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் ஊடகச் செய்திகளில் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலியாவின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீன அரசுக்கு டிக் டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசுத் துறையில் பணி செய்பவர்கள டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்கா முழுவதும் டிக் டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் டிக் டாக் மீதான குற்றச்சாட்டிற்கு அதன் சிஇஓ சவ் சி சூவ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் மார்ச் மாதம் ஆஜராகி விளக்கமளித்தார்.

ஏற்கெனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், நார்வே, ஆப்கானிஸ்தான் , பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in