

பாகிஸ்தான் ராணுவ தளபதிகள், அவர்களின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகும் பதவியில் நீடிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் முதல்முறையாக தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரிப் 3 ஆண்டு பதவிக் காலம் நிறைவடைந்து வரும் 29-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
லெப்டினென்ட் ஜெனரல் இஸ்பாக் நதீம் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்படலாம் என்று பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.