

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனரான ஆலிவர் ஸ்டோன், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட ரகசிய உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் வகையில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான எட்வெர்ட் ஸ்னோடென் மற்றும் அவர் அளித்த ரகசிய தகவல்களை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வரும் கார்டியன் பத்திரிகையின் கட்டுரையாளர் க்லீன் க்ரீண்வெல்ட் ஆகியோரின் உதவிகளை பெற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரான ஆலிவர் ஸ்டோன், இந்தக் கதை மிகவும் சவால் வாய்ந்ததாகவும், அமெரிக்காவின் புலனாய்வு குறித்து உலக நாடுகளுக்கு திரை வடிவில் அம்பலப்படுத்துவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
(என்எஸ்ஏ என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு மையம்) அமெரிக்க உளவுத் துறை அமைப்பின் முன்னாள் அதிகாரியான எட்வெர்ட் ஸ்னோடென், அமெரிக்க அரசு பிற நாடுகளின் ரகசியத் தகவல்கள் உளவு பார்த்து வருவதாக கடந்த ஆண்டு தகவல் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பல தகவல்களை வெளியிட்டு வந்த அவரை, அமெரிக்க அரசு நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து, அவர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தது.