ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; 19 பேர் காயம்

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; 19 பேர் காயம்
Updated on
1 min read

தெஹ்ரான்: ஈரானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ஈரானி தென்மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது. ஈரானில் ஹர்மோஸ்கன் மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரானில் கடந்த நவம்பர் மாதம் இரு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டன. இதில் ஒருவர் பலியானார். பல வீடுகளில் சேதம் அடைந்தன. 1990-ஆம் ஆண்டு 7.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டபோது சுமார் 40,000 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in