மே 24-ல் சீனா செல்கிறார் பிரணாப் முகர்ஜி

மே 24-ல் சீனா செல்கிறார் பிரணாப் முகர்ஜி
Updated on
1 min read

சீன அதிபர் ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் மே 24 முதல் 27 வரை சீனாவில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார்.

மே 24-ல், இந்தியாவுடன் வலுவான தொழில் தொடர்புகளை கொண்டுள்ள சீனாவின் தொழில் நகரான குவாங்சூ செல்கிறார் பிரணாப். அங்கு இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடும் அவர், இந்தியா சீனா வர்த்தக அமைப்பிலும் உரையாற்றுகிறார். அப்போது இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகளை அவர் விளக்குகிறார். மாகாண உயரதிகாரிகள், இந்திய, சீன தொழிலதிபர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 25-ல் தலைநகர் பெய்ஜிங் வரும் பிரணாப், அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மே 26-ல் பெக்கிங் பல்கலைக்கழகத்தில் பிரணாப் உரையாற்றுகிறார். பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் மற்றும் பிற சீன தலைவர்களை சந்திக்கிறார். அப்போது இந்தியா சீனா இடை யிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்.

மே 27-ல் பிரணாப் நாடு திரும்புகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in