

இந்தியா - ஈரான் உறவுகளை நெருக்கமாக கவனித்து வருகிறோம் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ஈரான் பயணத்தில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதில் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 500 மில்லியன் டாலர்கள் பெறுமான சபஹார் துறைமுகத் திட்டம் அடங்கும். இதற்கான சட்ட நடைமுறைகள், அளவுகோல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை கவனித்து வருவதாக அமெரிக்க அமைச்சர்கள் பேரவையில் ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இப்போதைக்கு ராணுவ அல்லது பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணி எதுவும் இருநாடுகளும் அமைத்துக் கொள்ளவில்லை ஏனெனில் இது அமெரிக்காவுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும் என்று உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு கமிட்டி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
“நாங்கள் இந்தியா-ஈரான் உறவுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். இருவரது பொருளாதார கூட்டுறவு எத்தகையது என்பதையும் நாங்கள் தடம் கண்டு வருகிறோம். அதாவது சட்ட அளவுகோல்கள் மற்றும் தேவைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி நாங்கள் கவனித்து வருகிறோம்” என்றார்.
அமெரிக்க செனட்டர் பென் கார்டின், பிரதமர் நரேந்திர மோடியின் ஈரான் பயணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பிஸ்வால் பதிலளித்தார்.
மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் சமீபத்தில் செய்து கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஒப்பந்தங்களுக்குப் பிறகே ஈரான் மீதான தடைகள் விலகியது. இதனையடுத்தே இந்தியா சபாஹர் துறைமுக திட்டத்துக்கு கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து செனட்டர் கார்டின் கேள்வி எழுப்பிய போது, “நம் ஒப்பந்தங்களை மீறுமாறு அதில் ஒன்றுமில்லை. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியா நம் கூட்டாளியாக உள்ளனர், ஆனால் ஈரானுடன் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்களினால் பயங்கரவாதத்திற்கான நிதி ஆதரவு உதவி அதிகரித்து விடாதா?” என்று கேட்டார்.
ஆனால் பதில் அளித்த பிஸ்வால், இந்தியா-ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படை பெருகிவரும் எரிசக்தி தேவைப்பாடுதான் என்று விளக்கம் அளித்தார்.
சபஹார் துறைமுகத் திட்டத்தைப் பொறுத்தவரை நமது கவலைகளை உள்ளடக்கியே இந்தியா செயல்படுகிறது, இருந்தாலும் கூர்ந்து கவனிக்கப்படும் என்றார்.