

சர்வதேச விண்வெளி நிலை யத்தில் பணியாற்றி வரும் விண் வெளி வீரர்களுக்கான உணவு, தண்ணீர், துணிகள் மற்றும் பிற பொருட்களுடன் ஆளில்லா விண் வெளி ஓடம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை விண்வெளி நிலையத்துடன், இந்த ஓடம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண் வெளி நிலையத்தை அமைத் துள்ளன. இந்த நிலையத்தில் சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் அவ் வப்போது விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வரு கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டன.
இதையடுத்து, 2வது முறையாக கடந்த செவ்வாய்கிழமை அன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஆய்வு நிலையத்தில் இருந்து சிக்னஸ் என்ற ஆளில்லா சரக்கு விண்வெளி ஓடம் மூலம் 3.6 மெட்ரிக் டன் எடை கொண்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனுடன் ஆறு விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், துணிகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வரும் சனிக் கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும் இந்த ஓடம், மே மாதம் வரையில் அங்கு இருக்கும்.
பின்னர் விண்வெளி நிலையத் தின் கழிவுப் பொருட்கள் ஆகிய வற்றுடன் பூமிக்கு திரும்பும் என கூறப்படுகிறது. விண்வெளி வீரர் களுக்கு இன்னும் கூடுதலாக இரு ஓடங்களில் பொருட்கள் தேவைப் படுகின்றன. எனவே, கோடை கால தொடக்கத்தில் மற்றொரு விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செலுத்தப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.