ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா பலி

ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா பலி
Updated on
1 min read

ரஷ்யாவில் கரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,179 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 812 பேர் பலியாகினர்.

ரஷ்யாவில் கரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவால் 1,99,808 பேர் பலியாகினர். மேலும் 73 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த ரஷ்ய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in