ஆப்கன் வெடிவிபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கன் வெடிவிபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு
Updated on: 
1 min read

காபூல்: ஆப்​கானிஸ்தானின் குனார் மாகாண தலைநகர் அசாதாபாத்​தில் அந்​தர் செர் என்​கிற இடத்​தில் நடுநிலைப் பள்ளி ஒன்று உள்​ளது.

இந்த பள்​ளிக்கு அருகே உள்ள ஒரு வீட்​டில் சுரங்​கப் பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படும் வெடிப் பொருட்​கள் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் நேற்று காலையில் அந்த வெடிப்​பொருட்​கள் திடீரென வெடித்து சிதறின. இ​தில் சிக்கி 7 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர்.

மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். அவர்​கள் அனைவரும் சிகிச்​சைக்​காக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைகளில் சேர்க்​கப்​பட்​டுள்ளனர்.

ஆப்கன் வெடிவிபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு
அனைத்து மாநில சட்டப்பேரவைத் தொகுதிகள் 50 சதவீதம் அதிகரிக்கப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

X