மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு

மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு
Updated on
1 min read

மூன்றாவது அலையின் தொடக்கத்தில் உலக நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரோனா தொற்றைத் தடுக்க இரு வெவ்வேறு நிறுவனங்களின் ஊசிகளைப் போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in