தீவிரவாத எதிர்ப்புக்காக பாகிஸ்தானுக்கு ரூ.5,800 கோடி நிதி: அமெரிக்க வெளியுறவுத் துறை பரிந்துரை

தீவிரவாத எதிர்ப்புக்காக பாகிஸ்தானுக்கு ரூ.5,800 கோடி நிதி: அமெரிக்க வெளியுறவுத் துறை பரிந்துரை
Updated on
1 min read

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவும், அணு ஆயுதங்களைப் பாதுகாக்கவும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 86 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 5,837 கோடி) நிதியுதவி அளிக்க, அமெரிக்க வெளியுறவுத் துறை பட்ஜெட் பரிந்துரை செய்துள்ளது.

அதிபர் ஒபாமாவின் பட்ஜெட் பரிந்துரைகளில் பாகிஸ்தான் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.5,837 கோடி நிதியுதவி அளிக்க தனது பட்ஜெட் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்நாடு தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கும், பொரு ளாதார வளர்ச்சி, சமூக சீர்திருத் தங்கள், ஸ்திரத் தன்மைக்காகவும் இந்த நிதி உதவும். அணு ஆயுதங்களை பாதுகாக்கவும் இந்த நிதி பயன்படும். அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கையின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி முயற்சி, அணு ஆயுதப் பரவல் தடை முயற்சி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படும்” என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு எதிர்பாராத செயல்பாட்டு நிதியிலிருந்து இந்த தொகை ஒதுக்கப்படுகிறது. இதில், சுமார் ரூ.1,800 கோடி ராணுவ தளவாடங்களுக்காக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இலங்கைக்கு ரூ.200 கோடி

இலங்கையில், உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்தவர்களுக் கான மறுகுடியமர்வுப் பணிகளை ஊக்கப்படுத்துதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு உள்ளிட்டவற்றுக்காக இலங்கைக்கு 3.1 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.200 கோடி) நிதியுதவி அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியின், பட்ஜெட் பரிந்துரையில் இது இடம்பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் 2016-17-ம் நிதியாண்டில் இத்தொகை ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு

சைபர் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயல் திட்டத்துக்கு 1,900 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி) நிதி ஒதுக்க அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.

“சைபர் குற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக சீரமைப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாம் சைபர் பாதுகாப்பு கல்வியில் முதலீடு செய்வோம். அமெரிக்காவிலேயே தகவல் தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்தவர்களை சைபர் பாதுகாப்புக்காக எனது அரசாங்கம் பணியமர்த்தும். ஒட்டுமொத்தமாக சைபர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய, முதல் முறையாக மத்திய தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி என்ற பணியிடம் உருவாக் கப்படும்” என ஒபாமா தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in