கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராகும் தென் ஆப்பிரிக்க அரசு

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராகும் தென் ஆப்பிரிக்க அரசு
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்கா விரைவில் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இருப்பதால், கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறும்போது, “தென் ஆப்பிரிக்கா, கரோனா மூன்றாவது அலையில் நுழைய இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. கரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைவதற்குள் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை 1% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் இதுவரை 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in