தடுப்பூசிகளால் கரோனா தொற்று 65% குறைந்துள்ளது: பிரிட்டன்

தடுப்பூசிகளால் கரோனா தொற்று 65% குறைந்துள்ளது: பிரிட்டன்
Updated on
1 min read

தடுப்பூசி செலுத்துவதை மக்களிடையே தீவிரப்படுத்தியதன் காரணமாக பிரிட்டனில் 65% கரோனா தொற்று குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், “கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட அனைத்து வயதினருக்கும் கரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. தடுப்பூசி காரணமாக பிரிட்டனில் 65% நோய்த்தொற்று குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இதுவரை 48% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக 5,000க்கும் குறைவானவர்களே தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

உலக அளவில் கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகுத்து வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in