

சிரிய அதிபர், அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிரிய அதிபர் அலுவலகம் தரப்பில், “சிரிய அதிபர் ஆசாத், அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த வாரம் முதலே கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. சிரியாவில் இதுவரை 15,981 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் பலியாகினர்.
உள்நாட்டுப் போர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.