மாஸ்க் போட மறந்த ஜெர்மனி அதிபர்: வைரலாகும் வீடியோ

மாஸ்க் போட மறந்த ஜெர்மனி அதிபர்: வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற உரையாடலின்போது மாஸ்கை மறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடாளுமன்ற உரையாடல் முன் முகக்கவசத்தை அணியாமல் தனது நாற்காலியில் அமர்ந்து விட்டார். பின்னர் மாஸ்க் அணியாதது நினைவுக்கு வந்து தனது நாற்காலியில் பதட்டத்துடன் எழுந்து மாஸ்கை பெற்று கொண்டு உரையாட ஆரம்பித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெர்க்கல் பேசிய 22 நிமிட உரையில், கரோனா வைரஸுக்கு எதிராக அவரது எடுத்து நடவடிக்கைகளை பற்றி பேசினார். மேலும் கரோனாவின் அடுத்த அலையை தடுப்பதற்காகவே ஊரடங்கு மார்ச் 7 ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை செலுத்தினால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். எனவே ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து சென்றய வேண்டும் என்றும் மெர்க்கல் கேட்டுக் கொண்டார்.

சீனாவை தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

இந்தநிலையில் பிரிட்டனில் பரவும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in