பிரேசிலில் கரோனா பலி 2,16,445 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனா பலி 2,16,445 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,202 பேர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2,16,445 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,202 பேர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2,16,445 ஆக அதிகரித்துள்ளது..
மேலும் நேற்று மட்டும் 62,334 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனனர். பிரேசிலில் இதுவரை 88 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in