மருத்துவ குழுவை சீனா அனுமதிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு ஏமாற்றம்

மருத்துவ குழுவை சீனா அனுமதிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு ஏமாற்றம்
Updated on
1 min read

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவை ஆய்வுக்காக சீனாவுக்குள் அனுமதிகாததது வருத்தம் அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞான குழு இம்மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியது.

ஆனால் தற்போது மருத்துவ குழு செல்வதற்கு சீனா அனுமதிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ் கூறும்போது, “ சீனாவின் வூஹான் மாகாணத்தின் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு வருகை புரிய இருந்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவுக்கு சீனா அனுமதி அளிக்கவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பாக சீன அதிகாரிகளை நான் தொடர்புக் கொண்டுள்ளேன். அவர்களிடம் எனது கருத்தை தெரிவித்து இருக்கிறேன்” என்றார்.

சில நாட்களுக்கு முன்னர், வூஹானின் ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை. உலகின் பல இடங்களில் கரோனா வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சீனா விளக்கமளித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in