

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பள்ளிக் கூடங்கள் இரு வாரங்களுக்கு மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாங்காங் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “தாய்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 279 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் பாங்காக்கில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பாங்காக்கில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாங்காக்கில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதைத் தொடர்ந்து பள்ளிகளை அடுத்த இரு வாரங்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.
இவ்வாறு உள்ள நிலையில் பைசர் கரோனா தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.