அர்ஜெண்டினாவில் கரோனா தடுப்பூசி பணி தொடக்கம்

அர்ஜெண்டினாவில் கரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
Updated on
1 min read

அர்ஜெண்டினாவில் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தை அளிக்கும் பணி தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அர்ஜெண்டினா சுகாதாரத்துறை தரப்பில், “ முதலில் சுகாதார பணியாளர்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். மேலும் நாட்டின் 23 மாகாணங்களுக்கு கரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்லப்படும். இது வரலாற்றின் முக்கியமான நேரம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு கடந்த வியாழக்கிழமை ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடுப்பு மருந்து செலுத்தும் பணியை அர்ஜெண்டினா அரசு தொடங்கி உள்ளது.

அர்ஜெண்டினாவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42.650 பேர் வரை பலியாகி உள்ளனர்.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in