

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் உயிரிழக்க நேரிடலாம் என்று ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் கூறும்போது, “கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட போதிலும், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு மேல் பலியாகலாம்.அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் கரோனா தடுப்பு மருந்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். மக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய வேண்டும். அமெரிக்கா மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளது.
தடுப்பு மருந்தை மக்களிடம் சென்றடையும் முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். அதிகமான மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
கரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக ஒய்வில்லாமல் உழைத்த விஞ்ஞானிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்க மக்களே கரோனா தடுப்பு குறித்து பயப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. தடுப்பு மருந்து இருப்பின் நீங்கள் அதனை தாரளமாக போட்டுக் கொள்ளலாம்’’ என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டார்.
ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்க தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்தை பெற்று வருகின்றனர்