மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ் கரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா ஒப்பந்தம்

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ் கரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா ஒப்பந்தம்
Updated on
1 min read

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ்க கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளோம்.

இந்தத் தடுப்பு மருந்துகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்தில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in