பாகிஸ்தானில் தொடர்ந்து நான்காவது நாளாக கரோனா பாதிப்பு அதிகரிப்பு

பாகிஸ்தானில் தொடர்ந்து நான்காவது நாளாக கரோனா பாதிப்பு அதிகரிப்பு

Published on

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,280 ஆக அதிகரித்துள்ளது.

சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிந்து மாகாணத்தில் 1,89,687 பேரும் பஞ்சாப் மாகாணத்தில் 1,25,250 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in