அமெரிக்காவில் ஒரே நாளில் 2,25,000 பேருக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,25,000 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,25,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவ பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,25,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2,506 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 லட்சம்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபநாட்களாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். மேலும் பொது மக்கள் முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in