ஸ்வீடனில் கரோனா பாதிப்பு 2,69,974 ஆக அதிகரிப்பு

ஸ்வீடனில் கரோனா பாதிப்பு 2,69,974 ஆக அதிகரிப்பு

Published on

ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில் 12,839 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஸ்வீடன் சுகாதாரத் துறை தரப்பில், “ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில் 12,839 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,69,974 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பலி எண்ணிக்கை பலி 3,158 ஆக உள்ளது’’ என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

ஜெர்மனி, பிரிட்டன், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in