

பாகிஸ்தானில் கரோனா மீண்டும் திவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. புதிதாக 2,443 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,443 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கரோனா பரவி வருகிறது. பாகிஸ்தானில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.