பாகிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

பாகிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,304 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“பாகிஸ்தானில் மீண்டும் கரோனா தொற்று அதிகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,304 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,52,296 ஆக அதிகரித்துள்ளது. 37 பேர் பலியான நிலையில், கரோனா பலி எண்ணிக்கை 7,092 ஆக அதிகரித்துள்ளது” என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in