அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டாலர் ஆன்லைன் சூதாட்டம்: வெள்ளை மாளிகை ரகசியங்கள் கசிந்ததா?

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டாலர் ஆன்லைன் சூதாட்டம்: வெள்ளை மாளிகை ரகசியங்கள் கசிந்ததா?
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்கா மற்​றும் ஈரான் நாடு​களுக்கு இடையே நடை​பெற்று வரும் போர் தொடர்பாக ஆன்​லைன் சூதாட்​டத்தில் லட்​சக்​கணக்​கான டாலர்​கள் லாபம் ஈட்​டப்​பட்​டிருக்​கலாம் என்ற அதிர்ச்​சித் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து அமெரிக்​கா​வின் நாளிதழான வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல் தெரி​வித்​துள்​ள​தாவது: அமெரிக்​க-ஈ​ரான் போர் நிறுத்த விவ​காரத்​தில் 6 லட்​சம் டாலர் அளவுக்கு ஆன்​லைன் சூதாட்​டம் நடை​பெற்​றுள்​ள​தாக கூறப்​படு​கிறது. அமெரிக்க நிர்​வாகத்​தின் ரகசி​யத் தகவல்​களைப் பயன்​படுத்தி பாலி​மார்க்​கெட் மற்​றும் கால்ஷி போன்ற ஆன்​லைன் வர்த்தக மற்​றும் சூதாட்​டத் தளங்​களில் பந்​த​யம் கட்​டப்​பட்​டிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​கிறது.

கடந்த பிப்​ர​வரி மாதம் போர் தொடங்​கிய​தில் இருந்தே இது போன்ற பல்​வேறு ஆன்​லைன் பந்​த​யங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. இதன் காரண​மாக, கடந்த மார்ச் மாதமே வெள்ளை மாளிகை ஊழியர்​களுக்கு அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில், நிதி ஆதா​யங்​களுக்​காகப் பொது​வெளி​யில் இல்​லாத ரகசி​யத் தகவல்​களைப் பகிர்​வதற்கு தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது.

கடந்த ஏப்​ரல் மாதத்​தில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​படு​மா என்ற தலைப்​பில் பந்​தயம் நடந்துள்ளது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி, அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானுடன் முதற்​கட்ட போர் நிறுத்​தத்தை அறி​வித்​தார். இந்த அறிவிப்பு வெளி​யா​வதற்கு முன்​பே, பிளாக்​செ​யின் ஆராய்ச்சி நிறுவன​மான பபிள்​மேப்ஸ் நடத்​திய ஆய்​வில், பாலி​மார்க்​கெட் தளத்​தில் உள்ள மூன்று அநாமதேயக் கணக்​கு​கள், ஏப்​ரல் போர் நிறுத்த அறி​விப்​பைச் சரி​யாகக் கணித்து பந்​த​யம் கட்​டி, 6,00,000 டாலருக்​கும் அதி​க​மாக (இந்​திய மதிப்​பில் சுமார் 5.77 கோடி ரூபாய்க்​கும் மேல்) லாபம் ஈட்​டி​யுள்​ளது அம்​பல​மாகி​யுள்​ளது. இதன் மூலம் அதி​காரப்​பூர்வ அறி​விப்​புக்கு முன்பே ரகசி​யத் தகவல் கசிந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாக, அதிபர் ட்ரம்ப்​பின் டெலிபி​ராம்ப்​டர் ஆபரேட்​ட​ரான கேப்​ரியல் பெரெஸ் மீதான விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது. அதிபர் நிகழ்த்​த​விருக்​கும் உரைகளை முன்​கூட்​டியே அணுகி, அந்​தத் தகவல்​களைப் பந்​த​யம் கட்​டு​வதற்​காக அவர் கசி​ய​விட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

ஆன்​லைன் சூதாட்​டங்​கள் மூலம் பெரெஸ் 1,00,000 டாலருக்​கும் அதி​க​மாகச் சம்​பா​தித்​தது குறித்​து, அமெரிக்​கா​வின் கமாடிட்டி ஃபியூச்​சர்ஸ் டிரேடிங் கமிஷன் விசா​ரணை நடத்தி வரு​வதை வெள்ளை மாளி​கை​யும் உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. இந்த சூதாட்ட விவ​காரம் வெள்ளை மாளிகை வட்​டாரத்​தில்​ பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி​யிருப்​பதுடன்​, பல உயர்​ அதி​காரி​களை தீவிரக்​ கண்காணிப்​பின்​ கீழ்​ கொண்​டு வர ​காரண​மாகி உள்​ளது. இவ்​​வாறு ​வால்​ ஸ்​ட்​ரீட்​ ஜர்​னல்​ தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டாலர் ஆன்லைன் சூதாட்டம்: வெள்ளை மாளிகை ரகசியங்கள் கசிந்ததா?
QALA: ஆணாதிக்கம் தரித்த தாயும், ‘கண்ணீர் சாட்சி’ கலாவும் | திரை தேவதைகள் 27

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in