இலங்கையில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது
Updated on
1 min read

இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை சுகாதாரத் துறை தரப்பில், ''கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 865 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பெரும்பாலானவர்களுக்கு பிலியாகோடா மீன் சந்தையிலிருந்து கரோனா வைரஸ் தொற்றுப் பரவியது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேற்குப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. மேலும், பிலியாகோடா மீன் சந்தையும் மூடப்பட்டது.

இலங்கையில் கரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், முக்கிய அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் இலங்கை அரசு முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in