பாகிஸ்தானில் சில மாகாணங்களில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

பாகிஸ்தானில் சில மாகாணங்களில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

பாகிஸ்தானில் பஞ்சாப், லாகூர் உள்ளிட்ட சில மாகாணங்களில் கரோனா இரண்டாம் கட்டப் பரவல் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “பாகிஸ்தானில் பஞ்சாப், லாகூர் உள்ளிட்ட சில மாகாணங்களில் கரோனா இரண்டாம் கட்ட அலை பரவத் தொடங்கியுள்ளது. பஞ்சாப், லாகூர் மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தலா 203 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தானில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in