பிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

பிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
Updated on
1 min read

பிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டன் அரசின் மூத்த மருத்துவர் பாட்ரிக் வாலன்ஸ் கூறும்போது, “நாம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் 50,000 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிட்டனில் இதே நிலை தொடர்ந்தால் கரோனாவினால் ஏற்படும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in