

துருக்கியில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு கூட்டங்கள் நடத்துவதற்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துருக்கி அரசு வெளியிட்ட அறிக்கையில், “ துருக்கியின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரமான இஸ்தான்புல்லில் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் விழாக்களை பொது இடங்களில் நடத்துவதற்கு மீண்டும் தடைவிதிக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் வெள்ளிக்கிழமை 1,671 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 56 பேர் பலியாகினர்.
துருக்கியில் இதுவரை 2,90,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,951 பேர் பலியாகி உள்ளனர்.
உலகின் பல முன்னணி நாடுகளும் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
கிட்டத்தட்ட அந்தத் தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.