

காங்கோவின் கிவு மாகாணத்தில் உள்ள சுரங்க கிணற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலியாகினர்.
இதுகுறித்து காங்கோ அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “ காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள சுரங்க கிணற்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 50 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். தொடர்ந்து மாயமனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிலச்சரிவு குறித்து விசாரணை நடந்து வருவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கிவு மாகாணத்தில் நிலச்சரிவுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இதில் பல உயிர்கள் பலியாகி வருகின்றன.
கரோனா வைரஸ்
காங்கோவில் 10,361 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,622 பேர் குணமடைந்துள்ளனர். 262 பேர் பலியாகி உள்ளனர்.