

வங்கதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில், 12 பேர் பலியாகியுள்ளானர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வங்கதேச போலீஸார் சனிக்கிழமை கூறும்போது, “வங்கதேசத்தின் மத்தியப் பகுதி நகரமான நாராயன்கன்ஜியில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் மசூதியில் பரவிய தீ, அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பரவியது. இதில் 12 பேர் பலியாகினர்.
30க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து, உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.
மின்வெட்டு காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் தீ விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பாதிப்பு
வங்கதேசத்தில் கரோனா வைரஸால் 3,21,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.