

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா சுகாதாரத் துறை தரப்பில், “ ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் விக்டோரியா மாகாணத்தில் 113 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 26,049 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 678 பேர் பலியாகி உள்ளனர். 21,912 பேர் குணமடைந்துள்ளன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் ஜூலை மாதம் முன்றிலக்க எண்ணிக்கையில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தொற்று குறைந்துள்ளது.
மெல்போர்னிலும் கரோனா தொற்று குறைந்துள்ளது. இந்தநிலையில் செப்டம்பர் மாதம்13 ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என்று ஆஸ்திரேலியாவில் அரசு தெரிவித்துள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.