

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் பாரீஸில் நடைபெற்ற சந்திப்பின்போது கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றனது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகளின் செயல்பாடுகளையே தலைகீழாக மாறியுள்ளது. இன்னும் கரோனா தொற்றை தடுப்பதற்கு ஊரடங்குகள் நீடிக்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடனே உலகத் தலைவர்கள் முக்கியமான கூட்டங்களையும், பிற நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து வருகின்றன.
அந்த வகையில் பாரீஸில் முக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும், ஜெர்மனி அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் கைகளை குலுக்கி கொள்ளாமல் இரு கரங்களை கூப்பி வரவேற்றுக் கொண்டனர்.
இதனை பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
பிரான்ஸ் - ஜெர்மனி நாடுகளிடையே உள்ள இருதரப்பு உறவுக் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிகப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.