

லத்தின் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,056 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொலம்பியா சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,056 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலம்பியாவில் கரோனா பாதிப்பு 5,02,178 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் பலியாக கொலம்பியாவில் இதுவரை 15,979 பேர் பலியாகி உள்ளனர். மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.