கரோனா வைரஸ் பாதிப்பு 2,00,74,280 ஆக அதிகரிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு 2,00,74,280 ஆக அதிகரிப்பு

Published on

உலகம் முழுவதும் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,00,74,280 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,00,74,280 ஆக அதிகரித்துள்ளது. 1,22,71,724 பேர் குணமடைந்துள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஷ்யா கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in