

சூடானில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “ ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் காரணமாக ஆயிரக்காணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் காரணமாக உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு சுமார் 18 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் வழக்கமாக ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்கள் பருவ மழை காலமாகும். சூடானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழைக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுள்ளனர்.
கரோனா வைரஸ்
சூடானில் கரோனா வைரஸுக்கு 11,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 752 பலர் பலியாகி உள்ளனர். 6,137 பேர் குணமடைந்துள்ளனர்.