

ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், ''ஜப்பானில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோ நகரிலிருந்து 291 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.
4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், ஆண்டொன்றுக்கு உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஜப்பானில் மட்டும் 20% நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.