ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகத்தின் மீது துப்பாக்கிச்சூடு

ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகத்தின் மீது துப்பாக்கிச்சூடு
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் அமைந்திருக்கும் இந்திய உணவகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

சிட்னியில் ஹாரிஸ் பார்க் பகுதியில் இந்திய உணவகம் செயல்படுகிறது. இதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்தபோது உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை என சுமார் 40 பேர் இருந்தனர். உணவகத்தை குறி வைத்து வெளியிலிருந்து தாக்கிய மர்ம நபர் குறித்து சிட்னி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நீல நிற உடை அணிந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in